கீழக்கரை மார்ச், 31
கீழக்கரை ரத்த உறவுகள் என்ற பெயரில் இளைஞர்களை கொண்ட ஒரு அமைப்பு ரத்த தான முகாம்கள் நடத்துவது, ரத்தம் தேவைப்படுவோருக்கு உரிய வகை ரத்தம் கிடைக்க ஏற்பாடு செய்வது போன்ற சமூக நல பணிகளை செய்து வருகின்றனர்.
கடந்த இரண்டு வருடங்களாக ரமலான் மாதம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு பிடிக்க அதிகாலை (சஹர்) நேரத்திற்கான உணவு ஏற்பாடு செய்து 400 பேருக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.
இந்த உணவு வினியோகத்திற்காக பொதுமக்கள்,செல்வந்தர்களிடம் உரிய பொருளாதார உதவியை பெற்று சிறப்பாக நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான உணவு வழங்கப்படுகிறது. கீழக்கரையில் உணவு தயாரிப்பில் சிறந்து விளங்கும் SM கிச்சன் இஸ்மாயில் மூலம் உணவு தயாரிப்பதால் சஹர் உணவு தரமாகவும் சுவையாகவும் இருப்பதாக பலரும் கூறுகின்றனர்.
இளைஞர்களின் சமூக நல பணிகளை பாராட்டுவதோடு அவர்களுக்கு போதுமான ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்குவது பொதுமக்களின் மீதான காலத்தின் அவசியமாகும்.
ஜஹாங்கீர் அரூஸி.//மாவட்ட நிருபர்.