மார்ச், 31
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வருடந்தோறும் ரமலான் மாத காலத்தில் தேவையுடைய மக்களுக்கு தேவையான அரிசி,பருப்பு,எண்ணெய்,மசாலா உள்ளிட்ட உணவு பொருட்களை மர்ஹூம் B.S.அப்துல் ரஹ்மான் மற்றும் மர்ஹூம் தாசீம்பீவி அப்துல்காதர் ஆகியோரின் சார்பாக அவர்களின் குடும்பத்தார் வழங்கி வருகின்றனர்.
இவ்வருடம் கீழக்கரை மற்றும் சென்னை என தேவையுடைய மக்களுக்கும் ஏர்வாடி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களுக்கும் 1500 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.
சராசரியாக ஒரு குடும்பத்தில் 4 உறுப்பினர் எண்ணிக்கை என்கிற ரீதியில் கணக்கிட்டால்?ஆறாயிரம் நபர்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளனர்.
இந்த உதவிகளை கீழக்கரை ஃபேர்ல் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் வைத்து ஜனாப் M.K.M.காலித் புகாரி,ஜனாப் M.K.M.சையது முகம்மது புகாரி ஆகியோரின் முன்னிலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
ஃபேர்ல் மெட்ரிக் பள்ளியின் AO ஜனாப் ஷேக் தாவுத்,ஜனாப் M.K.E.உமர் மற்றும் மர்ஹூம் B.S.அப்துல்ரஹ்மான்,மர்ஹூம் தாசீம்பீவி அப்துல்காதர் குடும்பத்தார்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பல ஆண்டுகளாக இத்தகைய நல்லறப்பணியை தொடர்ந்து செய்து வரும் மர்ஹூம் B.S.அப்துல் ரஹ்மான் மர்ஹூம் தாசீம்பீவி அப்துல்காதர் ஆகியோரின் குடும்பத்தார்களுக்கு பயனாளிகள் தங்களின் நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருவதோடு இத்தகைய அறம் சார்ந்த ஈகைப்பணிகள் தொடர வேண்டுமென நமது வணக்கம் பாரதம் இதழின் சார்பிலும் வாழ்த்துகிறோம்.
ஜஹாங்கீர் அரூஸி//மாவட்ட நிருபர்