சென்னை மார்ச், 27
சென்னையில் பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வை 17,663 மாணவர்கள் எழுதவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வு நடைபெற்றது. இது சென்னையில் 9. 26 லட்சம் மாணவர்கள், பெயர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 17,663 பேர் தேர்வு எழுதவில்லை. இதற்கான காரணம் சரியாக தெரியாத நிலையில் அது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆய்வு செய்து வருவதாக தெரிகிறது.