சென்னை மார்ச், 26
தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கியுளளது. ஏப்ரல் 8 வரை 4107 மையங்களில் நடைபெறும். இத்தேர்வைமாணவர்கள், தனி தேர்வர்கள் சிறை கைதிகள் உட்பட 9.38 லட்சம் பேர் எழுதுகின்றனர். முறைகேடுகளை தடுக்க மாநிலம் முழுவதும் 4,591 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 12 முதல் 22ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும் மே 10ம் தேதி தேர்வு முடிவு வெளியாக உள்ளது.