துபாய் மார்ச், 25
ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்படும் அன்வர் குரூப் நிறுவனத்தின் அன்வர் பிசினஸ் மேன் சர்வீசஸ் தலைமை அலுவலகத்தில், துபாய் கர்டின் பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் பொறியியல் துறை தலைவரும், ஆராய்ச்சித்துறை இயக்குநருமான பேராசிரியர் டாக்டர் சித்திரை பொன் செல்வனுக்கு அமீரகத்தின் கோல்டன் விசா என்ற 10 ஆண்டுக்கான விசா வழங்கப்பட்டது.
இவ்விசாவை அன்வர் குழுமங்களின் வர்த்தக ஒருங்கிணைப்பாளர் அமீரகத்தைசேர்ந்த அலி சயீத் அலி புத்தவில் அல் மத்ரூசி வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்வில் அன்வர் குரூப் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அன்வர்தீன், பி.எம். குரூப் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் கனகராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் பேராசிரியர் பிரிவின் கீழ் 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசா பெற்ற முதல் தமிழர் என்ற பெருமையை டாக்டர் சித்திரை பொன்செல்வன் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
S. தஸ்லீமா B Sc, MCA//முதன்மை நிருபர் – வளைகுடா