புதுடெல்லி மார்ச், 24
இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 64 ஆயிரத்து 249 கோடி அமெரிக்க டாலரை எட்டி, வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது ஆர்பிஐ வெளியிட்டுள்ள குறிப்பில், “மார்ச் 15ம் தேதி நிலவரப்படி அந்நிய செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துக்கள் 603 கோடி டாலர் உயர்ந்து 56 ஆயிரத்து 838 கோடி டாலராக உள்ளது. சர்வதேச நிதியத்தில், நாட்டின் கையிருப்பு 13 கோடி டாலர் உயர்ந்து 469 கோடி டாலராக உள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.