ஈரோடு ஆக, 26
ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த கள்ளிப்பட்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவச்சிலையை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர்,
தந்தையின் சிலையைத் திறக்கும் மகனாக அல்லாமல், தலைவர் சிலையைத் திறக்கும் தொண்டனாக நான் வந்திருக்கிறேன். கருணாநிதியின் சிலையை பார்க்கும்போது நாம் உணர்வை, உத்வேகத்தை, உற்சாகத்தை, மகிழ்ச்சியை பெறுகிறோம். கருணாநிதியைப்போல, பேச, எழுத, உழைக்க முடியாது என்றாலும், அவர் நினைத்த காரியங்கள் அனைத்தையும் முடிக்க வேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டுதான், 6வது முறையாக தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளோம் என பெரிமிதத்துடன் கூறினார்.
இவ்விழாவில், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவகுமார், ஈரோடு மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், ஈரோடு நகர செயலாளர் சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், மண்டல தலைவர்கள் சுப்பிரமணியம், தண்டபாணி, மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் குணசேகரன் கலந்து கொண்டனர்