Spread the love

அரியலூர் ஆகஸ்ட், 26

ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-23ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கணிதம் நீங்களாக அனைத்து துறைகளிலும் நிறைவு பெற்றது. இதையடுத்து கடந்த 24 ம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கின. இதையடுத்து, முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ள 247 மாணவ-மாணவிகளுக்கு புத்தொளி பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் கல்லூரி முதல்வர் கலைச்செல்வி தலைமை தாங்கி கல்வியின் முக்கியத்துவம், நேர மேலாண்மை, ஆளுமை திறன் குறித்து விளக்கி கூறினார். முன்னதாக இணை பேராசிரியர் ராஜமூர்த்தி வரவேற்றார். முடிவில் பேராசிரியர் கோடித்துரை நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *