சென்னை மார்ச், 12
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் SK23 படம் கஜினி போன்று மாறுபட்ட கதைகளத்தில் இருக்கும் என்று சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. பரபரப்புக்கு குறைவில்லாத ஆக்ஷன் மற்றும் காதலுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் படம் பயணிக்கும் என்றும் இந்த படத்தின் உடல் மொழிக்காக சிவகார்த்திகேயன் சிறப்பு பயிற்சி பெற்று வருகிறார் என்றும் அறிய முடிகிறது.