புதுடெல்லி மார்ச், 2
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் அந்நிய நேரடி முதலீடுகள் 13 சதவீதம் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2022 ம் ஆண்டு நிதியாண்டில் இதே காலத்தில் 3.4லட்சம் கோடியாக இருந்த அந்நிய நேரடி முதலீடுகளின் மதிப்பு தற்போது 2.68 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. உலக அளவிலான வட்டி விகித அதிகரிப்பு புவிசார் பதற்ற நிலை காரணமாக FDI முதலீடுகள் குறைந்து இருக்கலாம் என சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.