மும்பை ஆக, 26
அகில இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கு FIFA (உலக கால்பந்து சம்மேளனம்) கடந்த வாரம் தடை விதித்தது.
இந்திய கால்பந்து சம்மேளனம் நடவடிக்கையில் மூன்றாவது நபர்கள் தலையிடுவதாக கூறி இந்த நடவடிக்கையை எடுத்தது.
மேலும் அகில இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு முறையான தேர்தல் நடத்தப்பட்டு உரிய தலைவர்கள் பதவியேற்று தங்கள் பணியை தொடர்ந்த பிறகு தான் இந்த தடையை நீக்குவோம் என்று FIFA அறிவித்துள்ளது.தற்போது வரும் செப்டம்பர் மாதம் இந்திய அணி 24ம் தேதி சிங்கப்பூருக்கு எதிராகவும், 27ம் தேதி வியட்நாம்க்கு எதிராகவும் சர்வதேச போட்டியில் விளையாட இருந்தது. ஆனால் தற்போது தடை விதிக்கப்பட்டு உள்ளதால் இந்த போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட தடை பிறகு FIFA தற்போது தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் இந்தியாவுக்கு இடம் கிடைக்குமா என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இந்தியா அதே 104வது இடத்தில் நீடிப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு தடை விதித்த பிறகும் பட்டியலில் இந்தியா பெயர் இருந்தது கால்பந்து ரசிகர்கள் மத்தியில் நிம்மதி கொடுத்துள்ளது. வழக்கம் போல் முதலிடத்தில் பிரேசில் அணி உள்ளது. இரண்டாவது இடத்தில் பெல்ஜியமும் மூன்றாவது இடத்தில் அர்ஜென்டினாவும், நான்காவது இடத்தில் பிரான்சும், ஐந்தாவது இடத்தில் இங்கிலாந்தும் உள்ளனர்.