சென்னை பிப், 29
நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை சார்பில் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு வலைத்தளம் மற்றும் கைப்பேசி செயலியை அமைச்சர்தங்கம் தென்னரசு நேற்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு பொது நிதி மேலாண்மை அமைப்பை நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று கருவூலம் மற்றும் கணக்கு துறை சார்பில் சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்பழகன் மாளிகை ஆறாவது தளத்தில் தொடங்கி வைத்தார்.
மேலும் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு வலைதளம் மற்றும் கைபேசி செயலி, அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள், புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் சிகிச்சைகளின் விபர பட்டியல்கள், மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகள் பதிவிறக்கம் செய்யும் வசதிகள் மற்றும் பல விபரங்களை அறிந்து கொள்ளும் வகையில் வலைதளம் மற்றும் கைபேசி செயலியை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நிதித்துறை முதன்மை செயலர் உதயசந்திரன் அரசு சிறப்பு செயலர் பிரசாந்த் வடநெர கருவூலம் மற்றும் கணக்கு துறை ஆணையர் விஜயேந்திர பாண்டியன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.