நெல்லை ஆக, 25
நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நெல்லை மாவட்ட ஊர்காவல்படைப் பிரிவில் சேர்ந்து, சேவை செய்வதற்காக மாவட்டத்தில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். ஊர்க்காவல்படைப் பிரிவில் சேர்ந்து சேவை செய்ய விரும்பும் நபர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதுக்கு உட்பட்ட வராகவும், நல்ல உடற்தகுதி யுடனும் இருத்தல் வேண்டும்.
குறைந்தபட்ச கல்வி தகுதி 10 ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். அரசு துறையில் பணி புரிபவர்களாகவோ அல்லது சுயதொழில் செய்பவர்களாகவோ இருக்கலாம்.
மேலும் தேர்ந்தெடுக்கப்படும் ஊர்க்காவல்படை வீரர்களுக்கு காவல் துறையினரால் 45 வேலை நாட்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்படும். அதன் பின்னர் சேவை புரியும் காலத்தில் அழைப்பு பணி ஒன்றுக்கு ரூ.280 மட்டும் சேவை ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
இப்பிரிவில் சேவை செய்ய விருப்பமுள்ள வர்கள், பயோடேட்டா, கல்வி மற்றும் வயது சான்றின் நகல்கள், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் சுயமுகவரி குறிப்பிட்ட அஞ்சல் அட்டையுடன் விருப்ப மனுவினையும் வருகிற 30 ம் தேதி மதியம் 12 மணிக்குள் பாளையில் அமைந்துள்ள நெல்லை மாவட்ட ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என கூறி உள்ளார்.