திருவனந்தபுரம் ஆகஸ்ட், 24
இணையதள சேவையை பயன்படுத்துவோர் மத்தியில் ஆன்லைன் ரம்மி எனப்படும் சூதாட்டம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் பலரின் வாழ்க்கையை திசை திருப்பி சீரழித்து வரும் இந்த சூதாட்டத்தை ஒழிக்க ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை ஒழுங்குபடுத்திட கண்டிப்பான சட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்று தெரிவித்தார். தமிழகத்தில் கடந்தாண்டு இதற்கு எதிராக சட்டம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.