ஹரியானா பிப், 23
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி புறப்பட்ட விவசாயிகள் ஹரியானா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் எல்லைப் பகுதிகள் போர்க்களமாக மாறியது. இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தால் பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்படும் சேதத்திற்கு விவசாயிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்தும், வங்கி கணக்குகளில் இருந்தும் ஈடு செய்யப்படும் என ஹரியானா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.