கொடைக்கானல் ஆக, 25
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இருப்பினும் மீண்டும் தற்பொழுது நகர் சாலைகள் முழுவதும் ஆக்கிரமிப்புகளால் சூழ்ந்துள்ளது.
கொடைக்கானல் மூஞ்சிக்கல், ஆனந்தகிரி மாரியம்மன் கோவில் மற்றும் பிரதான சாலையான 4வது தெருவுக்கு செல்லும் வழியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால் வாகனங்கள் செல்லுவது மிகவும் சிரமமாக உள்ளது குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு மூன்று வாகனங்களாவது விபத்துக்கு உள்ளாகின்றன. இதனை மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையர் உடனடியாக கவனத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் ஆனந்தகிரி சாலையானது நீதிமன்றம், கொடைக்கானல் 100.5 Fm, மாவட்ட வருவாய் அலுவலகம், பல்கலைக்கழகம் போன்ற முக்கிய அலுவலகங்கள் உள்ளதால் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து இடையூறு இந்தப் பகுதிகளில் அதிகமாக ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் பள்ளி வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருக்கும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் உள்ள இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்படுகிறது.