சென்னை பிப், 10
சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு பத்து ரூபாய் குறைந்து ரூ.5,830க்கு விற்பனை ஆகிறது. நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 46 ஆயிரத்து 720 விற்பனையான நிலையில் இன்று ரூ.80 குறைந்து 46 ஆயிரத்து 640க்கு விற்பனையாகிறது. பிப்ரவரி 1ம் தேதி ரூ.47,040க்கு விற்பனையான தங்கத்தின் விலை 10 நாட்களில் 400 ரூபாய் சரிந்திருக்கிறது. வெள்ளி விலை மாற்றம் இன்றி கிராம் ஒன்றுக்கு ரூ.76.50 என்று விற்பனை ஆகிறது.