கீழக்கரை பிப், 8
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தின் அருகில் உள்ள பழம்பெரும் ஆபத்தான கட்டிடங்களில் மலேரியா கிளினிக்,மழலையர் ஊட்டச்சத்து மையம் மற்றும் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகின்றன.
இங்கு தினமும் நூற்றுக்கணக்கான குழந்தைகள்,பெண்கள்,முதியவர்கள் என மக்கள் வந்து செல்கின்றனர்.இந்த பழைய கட்டிடங்களின் அருகில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் புதிய கட்டிடமும் உள்ளது.இங்கு கர்ப்பிணி பெண்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் இருக்கும் பழைய கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு அரசின் நடவடிக்கை மிகவும் அவசியமாகும்.மனித உயிர்களை காவு வாங்குவதற்கு முன்பே மாவட்ட நிர்வாகம் துரிதமாக செயல்பட வேண்டுமென கோருகிறோம்.
ஜஹாங்கீர் அரூஸி//மாவட்ட நிருபர்