மதுரை பிப், 7
உயர்நீதிமன்ற விடுமுறை நாட்களை குறைப்பது குறித்து சென்னை, மதுரை வழக்கறிஞர் சங்கங்களிடம் நாடாளுமன்ற நிலை குழு இன்று மாலை கருத்து கேட்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட கோடை, குளிர்கால விடுமுறைகள் நடைமுறை தற்போது தொடர்கின்றன. இதனால் 210 நாட்கள் மட்டுமே உயர் நீதிமன்றம் செயல்படுவதால் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனை கருத்தில் கொண்டு விடுமுறையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.