சென்னை பிப், 6
அரசு பள்ளியில் பிளஸ் டூ வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்கு உதவும் வகையில் தமிழக அரசு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கி வருகிறது. அந்த வகையில் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவிகளுக்கு இந்த மாதத்திற்கான உதவித்தொகை நாளை வழங்கப்பட உள்ளது இதற்காக தேர்வு செய்யப்பட்ட மாணவிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.