சென்னை பிப், 3
eKYC ஐ புதுப்பிக்க வேண்டும் என வரும் அழைப்புகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்குமாறு RBI எச்சரித்துள்ளது. அடையாளம் தெரியாத நபர்களிடம் தங்களது ஆவணங்களை பகிர வேண்டாம் என்றும், பயனர் பெயர் பாஸ்வேர்ட் ஏடிஎம் கார்டு விபரங்கள் ஓடிபி ஆகியவற்றை எந்த சூழ்நிலையிலும் பகிரக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது ஏதேனும் மோசடி நடந்தால் உடனே சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு தெரிவிக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.