சென்னை ஜன, 24
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி விஜய் சேதுபதி இணைந்து நடித்த விடுதலை ஒன்று படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், கோடை விடுமுறையில் வெளியாகும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் எல்ரிட்குமார் உறுதிப்படுத்தியுள்ளார். சர்வதேச திரைப்பட விழாவில் விடுதலை ஒன்று மற்றும் இரண்டு திரையிட தேர்வாகி இருக்கிறது.