கீழக்கரை ஜன, 24
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடும் போக்குவரத்து நெருக்கடியால் பள்ளி,கல்லூரி செல்லும் மாணவர்களின் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி குறிப்பிட்ட நேரத்தில் பள்ளி, கல்லூரி செல்லமுடியாமல் அவதிப்படுகின்றனர்.
போக்குவரத்து நெருக்கடிக்கு தண்ணீர் லாரிகளும் ஒரு காரணமாக இருப்பதால் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து சமூக நல ஆர்வலர்கள்,பெற்றோர்கள்,மாணவர்கள் நகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
இதன் ஒருகட்டமாக காலை நேரத்தில் ஊருக்குள் தண்ணீர் லாரிகள் வருவதை கட்டுப்படுத்தும் வகையில் இன்று நகராட்சி அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையிலும் ஆணையாளர் செல்வராஜ், நகர்மன்ற துணைத் தலைவர் ஹமீதுசுல்தான் முன்னிலையிலும் நடைபெற்றது.
மேலும் இக்கூட்டத்தில் ஊருக்குள் தண்ணீர் விநியோகம் செய்யும் லாரிகள் காலை 10 மணி முதல் 12 மணிக்கும் நண்பகல் 2 மணி முதல் 4 மணிக்கும் மாலை 6 மணி முதல் 9 மணி வரைக்கும் மட்டுமே ஊருக்குள் வரவேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.
ஊருக்குள் வரும் குடிநீர் லாரிகளில் ஓட்டுனருடன் உதவியாளர் ஒருவரும் அவசியம் வரவேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இந்த செயல்திட்டத்தை வருகின்ற பிப்ரவரி(01.02.2024) முதல் தேதியில் இருந்து நடைமுறைபடுத்துவதென்றும் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் கீழக்கரை சார்பு ஆய்வாளர் முத்துக்குமார்,சுகாதாரத்துறை ஆய்வாளர் பரக்கத்துல்லா, நகராட்சி முதல்நிலை பொறியாளர் அருள்,நகர்மன்ற உறுப்பினர்களான பாதுஷா,மூர் நவாஸ்,மீரான் அலி,சேக் உசேன்,நசுருதீன்,சுஐபு,MMK காசிம்,சித்திக்,சக்கினா பேகம்,டெல்சி,சூர்யகலா,உம்முசல்மா,சுகன்யா வாட்டர், MSP வாட்டர் நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
ஜஹாங்கீர் அரூஸி//மாவட்ட நிருபர்