துபாய் ஜன, 24
ஐக்கிய அரபு அமீரக அஜ்மானில் உட்லாம் பார்க் பள்ளி உள்ளரங்கில் அமீரகத்தின் தமிழ் வானொலி கில்லி 106.5 எப்எம் நடத்திய பொங்கல் விழா, அமீரகத்தின் இந்திய துணைதூதர் சதீஸ்குமார் சிவன் தலைமையில் பிஎம் குரூப் நிறுவனர் மற்றும் கில்லி எப்எம் இயக்குனர் முனைவர் கனகராஜா தலைமையில், கில்லி எப்எம் சிஇஓ கோமதி கனகராஜா முன்னிலையில் மிக பிரமாண்டமான பொங்கல் விழா, மதியம் முதல் ஆரம்பித்து இரவு வரை, ஆடல், பாடல், சிலம்பாட்டம் பட்டிமன்றம், கோலம் போட்டி, தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த கிராமிய கலைஞர்களின் கரகாட்டம், பல்வேறு போட்டிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளோடு ஆர்ஜே கார்த்தி, மற்றும் ஆர்ஜே ரோஸ் ஆகியோர் தொகுத்துவழங்க சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு கௌரவ விருந்தினராக, தமிழ் நாட்டிலிருந்து நடிகர்கள் பரத், நடிகர் தீனா, நடிகர் கணேஷ், நடிகை ஆர்த்தி, அமீரகத்தைசேர்ந்த அலிபுத்தவில் மத்ரூசி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் சிறப்பு விருந்தினர்களாக கள்ளிடைக்குறிச்சி முனைவர் முஹைதீன், பகவதி ரவி, அன்வர் குழுமம் நிறுவனர் அன்வர், கேப்டன் டிவி முதன்மை நிருபர் கமால் கேவிஎல், தினகுரல் தமிழ் தேசிய நாளிதழின் மற்றும் வணக்கம் பாரதம் வார இதழின் முதன்மை நிருபர் நஜீம் மரிக்கா, கள்ளக்குறிச்சி சின்னா, மதுரை உணவகம் பாலா, பாளையங்கோட்டை ரமேஷ், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் பார்வையாளர்களாக டிக்டாக் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கு மேற்பட்டோர் குடும்பத்தோடு கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் நிறைவாக நிறுவனர் முனைவர் கனகராஜா நன்றி கூறி நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழும் கொடுத்து மேலும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவாளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தார்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.