கீழக்கரை ஜன, 20
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட சாலைகளில் கழிவு நீர் வாறுகால் இணைப்பு கொடுக்கப்பட்டு அதன் மூலம் கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது.
ஆங்காங்கே கழிவு நீர் வாறுகால் இணைப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டு அதன் மீது சிமெண்ட் மூடி போடப்பட்டுள்ளது. மூடியின் தரம் மிகவும் மோசமாக இருப்பதால் ஆட்டோ,கார்கள் செல்லும் போது மூடி உடைந்து குழியாகி ஆபத்தை விளைவிக்கும் அபாயம் உள்ளது.
ஊர் முழுவதும் போடப்பட்டுள்ள தரமற்ற மூடிகளை அகற்றிவிட்டு தரமான மூடிகளை போடுவதற்கு நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.
மேலும் பள்ளி செல்லும் குழந்தைகளின் வாகனங்கள் வாறுகால் மூடியின் அபாயத்தில் சிக்கிவிடாமல் இருக்க போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை அவசியமாகும்.
ஜஹாங்கீர் அரூஸி//மாவட்ட நிருபர்