ஹரியானா ஜன, 19
ஹரியானாவில் ட்ரோன் தொழில்நுட்ப மூலம் பயிர்களுக்கு பூச்சி மருந்து உரம் தெளிக்கும் திட்டத்தை மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார் துவங்கி வைத்தார். திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விவசாயிகள் பிரத்யோகப் போர்டலில் முதலில் பதிவு செய்வது அவசியம். பூச்சி மருந்து தெளிக்க ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 100 மட்டும் விவசாயிகளிடமிருந்து கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.