மதுரை ஜன, 15
தைப்பொங்கலை முன்னிட்டு உலக புகழ்பெற்ற அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. இதனை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா தொடங்கி வைத்த நிலையில், 600 காளைகளும்,1000 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். மாடுபிடி வீரர்கள் நேர்த்தியாக அடக்கி வருகின்றனர். இப்போட்டியில் முதலிடத்தை பிடிக்கும் காளைக்கும், காளையருக்கும் கார் பரிசாக வழங்கப்படும்.