சென்னை ஜன, 14
போகி பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் பழைய பொருட்களை எரித்து வருவதால், சென்னை நகரம் முழுவதும் புகையால் சூழப்பட்டுள்ளது. விடிந்த பின்பும் கூட புகைமண்டலம் விலகாமல் உள்ளது. இதன் காரணமாக சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தரையிறங்க முடியாத காரணத்தால் விமானங்கள் பூனே, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.