சென்னை ஜன, 14
பொங்கல் பண்டிகையை ஒட்டி பூக்களின் விலை கிடுகிடுவென்று அதிகரித்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.3000, பிச்சிப்பூ, முல்லை ரூ.2000, சம்பங்கி, செவ்வந்தி கிலோ ரூ.300, செண்டுமல்லி ரூ.100 அரளி ரூ.450, ரோஜா ரூ.300, கனகாம்பரம் ரூ.600, கோழிக்கொண்ட ரூ.80, வாடாமல்லி ரூ.80, மரிக்கொழுந்து ரூ.60க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பூக்களின் விலை உயர்வால் மக்கள் குறைந்த அளவில் பூக்களை வாங்கி செல்கின்றனர்.