ஒடிசா ஜன, 9
மருத்துவர்கள் யாருக்கும் புரியாமல் மருந்து சீட்டுகளை கையால் எழுதக் கூடாது என்று ஒடிசா நீதிமன்றம் உத்தரவிட்டது. மருந்து சீட்டு மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையை கையால் எழுதுவதால், புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. அதனால் மருந்து சீட்டு மருத்துவ அறிக்கையை கையால் எழுதுவதை தவிர்த்து கம்ப்யூட்டரில் டைப் செய்து தர வேண்டும் என்று அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.