தேனி ஜன, 6
71 அடி உயரமுள்ள வைகை அணை கனமழையால் முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து 3106 கன அடி உபரி நீர் பெரிய மதகுகள் வழியாக திறக்கப்படுவதால் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் கரையோர பகுதி மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.