கோவை ஜன, 3
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த வாரத்திலிருந்து கொரோனா தொற்று உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 14 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 187 ஆக உயர்ந்துள்ளது.