கீழக்கரை டிச, 31
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புகாரி ஷரீப் கமிட்டியின் சார்பில் ஒவ்வொரு வருடமும் தினமும் அனைத்து பள்ளிகளிலும் தொழுகைக்கு பிறகு புகாரி ஹதீஸ் வாசித்தல் நடைபெறுவது வழக்கம்.
அதன் நிறைவு விழா ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு ஜமாத் பள்ளியில் சுழற்சி முறையில் நடைபெறும்.அதன் ஒருபகுதியாக இன்று (31.12.2023) நடுத்தெரு ஜும் ஆ பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு PSM ஹுசைன் முன்னிலை வகித்தார்.
நடுத்தெரு ஜமாத் முத்தவல்லி ஹாஜி காதர் பக்ஸ் ஹுசைன் தலைமை வகித்து தொகுத்து வழங்கினார்.
முன்னதாக பள்ளி இமாம் பஷீர் ஆலிம் கிரா அத் ஓதி துவக்கி வைத்தார்.மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் MKE உமர், தெற்குத்தெரு ஜமாத் தலைவர் உமர் அப்துல் காதர் களஞ்சியம்,நமது KLK வெல்ஃபேர் கமிட்டி செயலாளர் கீழை ஜஹாங்கீர் அரூஸி,சுன்னத் வல்ஜமாத் அறக்கட்டளை நிர்வாகிகளான தைக்கா அப்துல் ஒபூர், ஹாஜா முகைதீன், இல்யாஸ், செல்லவாப்பா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ஜஹாங்கீர் அரூஸி.//மாவட்ட நிருபர்.