நெல்லை ஆகஸ்ட், 23
நெல்லை மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. அலுவலர்கள் சங்கத்தின் நெல்லை மாவட்ட தலைவர் சின்னத்துரை தலைமையில் மாவட்ட துணைத் தலைவர் முருகன், நெல்லை வட்டார தலைவர் பாப்பா என்ற குமார், பாறை பூ கணபதி, மாரியப்பன் ஆகியோர் மாநகராட்சி மேயர் சரவணன் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், மாநகராட்சியில் பணியாளர்கள் குறைகளை கேட்டு அவைகளை நிவர்த்தி செய்திடும் பொருட்டு மாதம் ஒருமுறை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், அரசின் விதிமுறைகளை பின்பற்றி குறைகளை கேட்டு அறிந்திட ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரை நியமனம் செய்திட வேண்டும் எனவும், எங்களது சங்கத்தின் சார்பில் கூட்டம் நடத்தி பணியாளர்களின் பாதுகாப்பு, சங்கத்தின் வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டங்கள் நடத்திட மாநகராட்சி அலுவலக வளாகத்திற்குள் ஒரு அறை ஒதுக்கி தர வேண்டும் எனவும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.