புதுடில்லி ஆகஸ்ட், 23
மத்திய அரசின் ‘பத்ம’ விருதுகளுக்கு செப்டம்பர் 15 வரை பொதுமக்கள் பரிந்துரை செய்யலாம்’ என, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கல்வி, கலை, அறிவியல், விளையாட்டு, இலக்கியம், மருத்துவம், சமூக சேவை, தொழிற்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு சார்பில் ஆண்டு தோறும் பத்ம விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. கடந்த 1954ம் ஆண்டு முதல் பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்படு வருகின்றன.
மேலும் 2023ம் ஆண்டுக்கான விருதுக்கு தகுதியானவர்களை பொதுமக்களும் பரிந்துரை செய்யலாம். மத்திய அரசின் இணையதளமான www.awards.gov.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 15 வரை பரிந்துரையை பதிவு செய்யலாம். தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஜனவரி26ம் தேதியன்று குடியரசு தின நாளில் அறிவிக்கப்படுவர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கி கவுரவிப்பார் என அதில் கூறப்பட்டுள்ளது.