Spread the love

டெல்லி ஆகஸ்ட், 20

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் காங்கிரசாரால் கொண்டாடப்பட்டு வருகிறது . இதையொட்டி டெல்லி வீர் பூமியில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் , ராஜீவ்காந்தி மகனும், காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி ,காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வத்ரா மலர்தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து, , காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, வேணுகோபால் உள்பட மூத்த தலைவர்கள் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் தொண்டர்களும் தங்கள் அஞ்சலியை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *