ராமநாதபுரம் டிச, 28
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஜனவரி 5ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள மீனவர்களும், மீனவ சங்கப் பிரதிநிதிகளும் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு மீன் பிடி தொடர்பான கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.