மதுரை டிச, 27
மதுரையில், ஜனவரி 07, 2024 அன்று நடைபெறவிருக்கும் SDPI கட்சியின் ‘வெல்லட்டும் மதச்சார்பின்மை’ – மாபெரும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டு நடைபெற உள்ளது.
இதற்கான அழைப்பிதழை, அஇஅதிமுக தலைமை கழக செய்தி தொடர்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வைகை செல்வன் அவர்களுக்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நேரில் வழங்கி அழைப்பு விடுத்தார்.
இந்நிகழ்வின்போது எஸ்டிபிஐ கட்சியின் மதுரை தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர், கலிபோர்னியா தமிழ் சங்க நிர்வாகி அபு தாஹிர் எஸ்டிபிஐ மாவட்ட செயற்குழு உறுப்பினர் நெல்பேட்டை சிக்கந்தர், மதுரை தெற்கு மாவட்ட சமூக ஊடக அணி தலைவர் தமிம் அன்சாரி ஆகியோர் உடனிருந்தனர்.