சென்னை டிச, 27
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலத்துடன் உள்ளார் என தேமுதிக தலைமை தெரிவித்துள்ளது. சிகிச்சை முடிந்து அண்மையில் வீடு திரும்பிய விஜயகாந்த் மீண்டும் தற்போது மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் பூரண நலத்துடன் இருப்பதாகவும், வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனை அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் திமுக தலைமை கூறியுள்ளது. அதோடு நாளை மறுநாள் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது.