ராமநாதபுரம் டிச, 26
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 7 வருடங்களுக்கு மேலாக பல்வேறு சமூக உதவிகள், கல்விகடன், மருத்துவ உதவி, வட்டியில்ல கடன் உதவி, மாதந்தோறும் இல்லாத குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் உதவி மற்றும் பேரிடர் கால உதவிகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்துவரும் 18 வாலிபர்கள் ஷஹீது கல்வி மற்றும் நல அறக்கட்டளையின் (ஜகாத் கமிட்டி) மூலமாக வெள்ள நிவாரண உதவியாக அன்றாடா தேவையான 18 பொருட்கள் அடங்கிய வெள்ள நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்றான ஆத்தூர் மற்றும் ஏரல் ஆகிய பகுதிக்கு ஜகாத் கமிட்டியின் தலைவர் ஜாஹிர் ஹுசைன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் ஜமாத் தலைவர் மேலத்தெரு முஜிபுர் ரஹ்மான் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று 400 பேர்களுக்குமேல் வழங்கப்பட்டது.
இப்பணியில் ஜாகாத் கமிட்டியின் தலைவர் ஜாஹிர் ஹுசைன், நிர்வாகிகள் ஹாஜி பஷிருதீன், நசுருதீன், ஃபாகிர், ஹம்தி, பைசல் உள்ளிட்டோர் சென்று நிவாரண பொருட்களை அம்மக்களுக்கு வழங்கினர்.
மேலும் இந்நிவாரணத்திற்கு உதவிகள் வழங்கிய அனைவருக்கும் 18 வாலிபர்கள் ஷஹீது கல்வி மற்றும் நல அறக்கட்டளையின் (ஜகாத் கமிட்டி) சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.