நெல்லை டிச, 24
தென் மாவட்டங்களில் பெய்த அதீத மழையால் வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் பாளையங்கோட்டையில் உள்ள இந்திய உணவுக் கழக பாதுகாப்பு குடோனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 8000 டன் அரிசி மழை நீரில் நனைந்து முற்றிலும் சேதம் அடைந்தது. மேலும் ஐந்து லட்சம் கிலோ கோதுமையும் சேதமடைந்ததால் அவற்றை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய உணவுக் கழக ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.