ராமநாதபுரம் டிச, 22
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை ஆற்றில் தற்போது இரண்டாவது முறையாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடை மடையான ராமநாதபுரம் நோக்கி செல்கிறது. இதனால் பரமக்குடியில் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.