சிவகங்கை டிச, 24
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 3/12/2023 அன்று நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள்
M. முகம்மது அஃபிக் “கட்டா” மற்றும் “குமிட்டே” போட்டிகளில் முதல் பரிசும்,
H. பெளசுல் ஹசன் “கட்டா” பிரிவில் முதல் பரிசும் “குமிட்டே” பிரிவில் மூன்றாம் பரிசும், அப்துல் முக்சித் “குமிட்டே ” மற்றும் ” கட்டா” போட்டிகளில் இரண்டாம் பரிசும், மேலும் E. முகம்மது ஃபர்ஹான் ” குமிட்டே” பிரிவில் மூன்றாம் பரிசும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும் வெற்றி பெற்ற மாணவர்களையும், கராத்தே பயிற்சியாளர் சசிகுமார் அவர்களையும் முதல்வர் மற்றும் தாளாளர் MMK முகைதீன் இப்ராகீம் ஆகியோர் பாராட்டினர்.
ஜஹாங்கீர் அரூஸி./மாவட்ட நிருபர்.