துபாய் டிச, 18
ஐக்கிய அரபு அமீரக அஜ்மானில் உள்ள Habitat பள்ளியில் பயின்று வரும் கீழக்கரை வடக்கு தெருவைசேர்ந்த செய்யது இபுராஹிம் (Al Hasna Jewelers உரிமையாளர், Sharjah) மகனான மாணவர் முகம்மது இஸ்ஹாக் (12) மற்றும் மாணவி நுரைஸா (9) ஆகியோர் மலேசியாவில் UCMAS இந்தியா சார்பில் A2 பிரிவில் நடைபெற்ற சர்வதேச அபாகஸ் போட்டியில் மூன்றாவது இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இப்போட்டியில் சர்வதேச அளவில் இருவரும் 3 வது இடம் பெற்று சாதனை பெற்றுள்ளனர். இச்சாதனை படைத்துள்ள மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அபாகஸ் பயிர்சியாளர் Mr. உமர் சரீப் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
சர்வதேச அபாகஸ் போட்டியில் வெற்றி பெற உதவியாக இருந்த ஆசிரியர் உமர் சரீப் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கும் மாணவர்களின் பெற்றோர் நன்றி தெரிவித்துள்ளனர்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.