புதுடெல்லி டிச, 14
கடந்த 10 ஆண்டுகளில் 1,562 பழைய சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய நீதி துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். மக்களவையில் பேசிய அவர் 2014 பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்த பின் தற்போதைய காலத்துக்கு ஒத்து வராத தேவையில்லா பழைய சட்டங்களை நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றார். 2004 முதல் 2014 காங்கிரஸ் ஆட்சியில் ஒரு பழைய சட்டம் கூட ரத்து செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.