துபாய் டிச, 14
2050க்குள் பெட்ரோல் உள்ளிட்ட புதை படிவ எரிபொருள் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்த 200 நாடுகள் முடிவு செய்துள்ளன துபாயில் நடந்த COP28 மாநாட்டில் காற்று மாசு விவகாரத்தில் தீர்வு காண்பது தொடர்பாக தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது முதல் முறையாக அனைத்து நாடுகளும் ஒருமித்து முற்றிலும் மாசில்லா எரிபொருட்களுக்கு மாறுவது என்ற நிலைப்பாட்டை எடுத்து ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதாக அறிய முடிகிறது.