சென்னை டிச, 11
மிக்ஜாம் புயல், கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஒரு வாரத்திற்குப் பிறகும் பிற மாவட்டங்களில் இரண்டு நாள் வார விடுமுறைக்கு பிறகும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறந்தாலும் இன்று நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வு டிசம்பர் 13ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் இன்றும், நாளையும் அரையாண்டு தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்ய பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.