தருமபுரி டிச, 9
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு நாளை நடைபெற உள்ளது.
இத்தேர்வு தருமபுரி மாவட்டத்தில் செந்தில் பப்ளிக் பள்ளி, அதியமான் கோட்டை விஜய் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி, பென்னாகரம் ரோடு பச்சமுத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விஜய் வித்யா ராம் சீனியர் செகண்டரி பள்ளி, அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய ஏழு தேர்வு மையங்களில் மொத்தம் 8990 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
மேலும் இத்தேர்வானது காலை 10 மணி முதல் 12:40 மணி வரையிலும் நடைபெற உள்ளது. இத்தேர்வில் கலந்து கொள்ள நுழைவுச்சீட்டு வரப்பெற்றவர்கள் காலை 8 மணிக்கு தேர்வு மையத்திற்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 900 காவல் அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.