சென்னை டிச, 6
‘மிக்ஜாம்’ புயல் காரணமாக இன்று நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக வெள்ளநீர் வடியாமல் உள்ளது. இதனால், பாதுகாப்பு காரணங்களுக்காக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. வெள்ள நீரை சரி செய்யும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.