கீழக்கரை டிச, 5
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்ட கீழக்கரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையின் சார்பில் வைக்கப்பட்ட ATM இயந்திரம் கடந்த நான்கு நாட்களாக இழுத்து மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து வங்கி மேலாளரிடம் விளக்கம் கேட்க நமது நிருபர் சென்ற போது கிளை மேலாளர் விடுப்பில் இருப்பதாக கூறிய துணை மேலாளர் காமாட்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஏற்பட்ட இடிமின்னலில் ATM இயந்திரத்தின் தொடர்பு சாதனங்கள் பழுதாகி விட்டதாகவும் அதனை சரி செய்யும் முயற்சியில் நிபுணர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் தெரிவித்தார்.
இரண்டொரு நாளில் சரியாகிடும் என்று கூறியுள்ள நிலையில், திடீரென ஏற்படும் மருத்துவ செலவினங்களுக்கு கூட பணம் எடுக்க முடியாமல் மக்கள் படும் அவதியை உணர்ந்து கால தாமதமின்றி வங்கி நிர்வாகம் துரிதமாக செயல்பட வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.
மேலும் அருகில் உள்ள HDFC,கனரா வங்கிகளின் ATM இயந்திரத்திலும் பணம் எடுக்கமுடியாமல் மக்கள் அவதிப்பட்டதே இன்றைய அவலநிலையாகும்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்
ராமநாதபுரம்.